ILC Tamil Radio

  • இத்தாலியில் நில அதிர்வு. இத்தாலியில் ஏற்பட்ட நில அதிர்வில் குறைந்த பட்சம் 37 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். ரோமின் வடகிழக்கு பகுதியில் 6.2 மெக்னிரியுட் அளவில் இன்று நில அதிர்வு ஒன்று பதிவாகியது. இந்த நில அதிர்வின் அங்குள்ள...
  • அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட 18 ஏதிலிகள் கைது. அண்மையில் சிறிலங்காவில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட 18 ஏதிலிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில், அவுஸ்திரேலிய அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியா சென்று ஏதிலி அந்தஸ்த்து கோரும் நோக்கில் பயணித்த அவர்கள், கிழக்கு கடற்பரப்பில் வைத்து கைது...
  • நா.முத்துகுமார் மரணம். மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட பாடலாசியர் நா.முத்துகுமார் மரணமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் பிறந்த இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இவருடைய எழுத்துக்களில் கவிதை...
  • படைத் துறை முதல் கட்சி அரசியல்வரை இணைய வெளி ஊடுருவல் – வேல் தர்மா 2016-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் அமெரிக்கப் படைத்துறையினர் இணையவெளிப் படைப் பிரிவிற்கு என ஒரு கட்டளைப் பணியகத்தை உருவாக்கியதுடன் அமெரிக்கப் படைத்துறைக்கான பொதுக் கட்டளையகத்தின் ஒரு பகுதியாக இணையவெளிப் படைத்துறையையும் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்கப் படைத்துறையின் இணையவெளியில் செய்யும் தமது...
  • தமிழகத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள். தமிழகத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக, முதன்முறையாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜகார்த்தாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய சிறிலங்காவின் அமைச்சர் கபீர் ஹசீம் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலத்தை அமைப்பதற்கான திட்டம்...

பிள்ளையானின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் அவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர். இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா முன்னிலையில் மீண்டும் நிறுத்தப்பட்டார்.

இதன்படி அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அம்பாறையில் காட்டு யானைத் தாக்கியதில் மற்றுமொருவர் உயிரிழந்தார்.

சம்மாந்துறை – மாவடிப்பள்ளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயல்வெளியில் காவற்கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது.

சம்பவத்தில் 32 வயதான நபர் ஒருவரே கொல்லப்பட்டார்.

புதிதாக உருவாக்கப்படுகின்ற அரசியல் யாப்பு தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதே. தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய இலக்கு.

எதிர்வரும் இரண்டு மாதங்களில் புதிய அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

இதனை அடுத்து அது குறித்த மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன் தூதுவர் டேவிட் டேலி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான விஜயத்தை நிறைவு செய்த அவர், தமது விஜயம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில்…,

கொழும்பில் இடம்பெறும் அபிவிருத்திகளைப் போல வடக்கில் இல்லை.

வடக்கில் வறுமை நிலைமை இன்னும் தீர்க்கப்படவில்லை.

காணாமல் போனோரின் உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

இந்த விடயத்தை அரசாங்கம் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.

அதன் ஒரு அங்கமாகக் காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்படுகின்றமை வரவேற்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைகளில் அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக் கோரும் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தப் பிரேரணையை ஆதரித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஏ.அரவிந்த்குமார் மற்றும் திலக்ராஜ் ஆகியோரும் உரையாற்றினர்.

இதற்கிடையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக அரசியல் கைதிகள் குறித்த விடயங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட மா அதிபர் திணைக்களம் உறுதியளித்துள்ளதாக, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்தே மீண்டும் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய, சிறிலங்காவின் சக்திவளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் ஊடாக பாரிய மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோப் குழு விசாரணை நடத்துவதுடன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் அதேநிறுவனத்திடம் இருந்து அடுத்தகட்ட நிலக்கரி கொள்வனவை மேற்கொள்ள சக்திவளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பணச்சலவைக் குற்றத்துக்கு உதவிய சிங்கள மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து கையாடப்பட்ட 2 லட்சம் பவுண்களுக்கும் அதிகமான தொகையை குறித்த இளைஞர், தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து சட்டரீதியான பணமாக மாற்ற உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவருக்கும் 22 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைக் குறித்த இளைஞர் தமது வீசா காலம் நிறைவடைந்த நிலையில் பிரித்தானியாவில் தங்கி இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அவரை தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர் நாடுகடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்படுகின்ற அரசியல் யாப்பு தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதே. தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய இலக்கு.

எதிர்வரும் இரண்டு மாதங்களில் புதிய அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

இதனை அடுத்து அது குறித்த மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைகளில் அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக் கோரும் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தப் பிரேரணையை ஆதரித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஏ.அரவிந்த்குமார் மற்றும் திலக்ராஜ் ஆகியோரும் உரையாற்றினர்.

இதற்கிடையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக அரசியல் கைதிகள் குறித்த விடயங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட மா அதிபர் திணைக்களம் உறுதியளித்துள்ளதாக, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் 1ம் வருடத் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் சிலர் நேற்று தாக்குதல் நடத்தினர்.

இதில் 5 தமிழ் மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது குறித்து இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.

வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று தமிழ் நாட்டுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமிழக மீனவர்களுடன் வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதன் பின்னர் ராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இதில் சிறிலங்காவின் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாண கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று மீண்டும் தமிழக கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கன்னியாக்குமாரி பகுதியைச் சேர்ந்த அவர்கள் கடந்த 8ம் திகதி யாழ்ப்பாணக் கடற்பரப்பில் வைத்து படகு பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதனை அடுத்து அவர்களின் படகு திருத்தப்பட்டு, இன்று தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்படி அவர்கள் தற்போது கன்னியாகுமாரியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் தமிழக சட்ட சபைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

தொடர் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் இருந்து நேற்று திமுக உறுப்பினர்களுக்கு குறுங்கால தடை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று அவர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுடன் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்ராலின் மௌன விரதத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

அதேநேரம், இந்த ஆண்டில் மாத்திரம், பாடசாலைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்த 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவில் இருந்து இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் காணாமல் போன 47 குழந்தைகளின் பெற்றோருக்கு 4 மாதத்துக்குள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வீதியோரங்களில் வசிக்கும் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் கடத்தல்காரர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.

அருன்காபாத் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் கட்டும் பணிகள் குறித்த இரகசியத் தகவல்கள் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் 3.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியானது.

இது தொடர்பிலான சுமார் 22 ஆயிரத்து 400 ஆவணங்கள் கசிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோர்பியன் இந்தியா என்ற இந்த வேலைத்திட்டத்தின் முதல்கட்டமாக ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன.

எனினும் இது குறித்து இன்னும் இந்தியா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஈராக்கில் கடத்தப்பட்டுள்ள 39 இந்தியர்களை மீட்பதற்கு உதவுமாறு, ஈராக் அரசாங்கத்தை இந்தியா கோரியுள்ளது.

அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இந்திய ராஜாங்க வெளிவிவகார அமைச்சர், எம்.ஜே. அக்பர், ஈராக்கின் ஜனாதிபதி உள்ளிட்டவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் 2014ம் ஆண்டு குறித்த 39 பேரும் கடத்தப்பட்டனர்.

அவர்கள் குறித்த தகவல்கள் எவையும் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர்களை மீட்பதற்கு ஈராக் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவி பேச்சாளர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முறுகல் நிலை அதிகரித்துள்ளது.

இதனைத் தணிக்க பேச்சுவார்த்தைகளே சிறந்த வழி.

இதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாவட்டத்தில் சபர்காந்த் மாவட்டத்தின் சபர்மதி அருவியில் மூழ்கி ஆறு பேர் பலியாகினர்.

சுற்றுலா சென்று அங்கு நீராடிய நிலையில் அவர்கள் நீருடன் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சிவன்கோவில் ஒன்றுக்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மழை காரணமாக குறித்த அருவியின் நீர்ப்பெருக்கு அதிகரித்து காணப்பட்ட நிலையில், அவர்கள் நீருடன் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்கள் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகப் பெரிய இயற்கையான முத்து ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக, பிலிப்பின்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் எடை 34 கிலோ கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முத்து 10 வருடங்களுக்கு முன்னரே மீனவர் ஒருவரினால் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் இதன் பெறுமதியை அறியாது, அதிஷ்ட்டம் தருமென்ற நம்பிக்கையில் தம்முடன் வைத்திருந்தார்.

தற்போது அதனை ஆபரண அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.

2 அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்டதாக இந்த முத்து காணப்படுகிறது.

தற்போது இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த முத்தே உலகின் மிகப்பெரிய முத்து என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது லாவோ சூ என்ற 6.4 கிலோ கிராம் எடைகொண்ட முத்தே உலகின் மிகப்பெரிய முத்தாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்தே மீண்டும் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய, சிறிலங்காவின் சக்திவளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் ஊடாக பாரிய மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோப் குழு விசாரணை நடத்துவதுடன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் அதேநிறுவனத்திடம் இருந்து அடுத்தகட்ட நிலக்கரி கொள்வனவை மேற்கொள்ள சக்திவளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நீண்டகாலம் ஜனாதிபதியாகப் பதவி வகித்த தமிழரான எச்.ஆர்.நாதன் தமது 92வது வயதில் காலமானார்.

செல்லப்பன் ராமநாதன் என்ற முழுப் பெயரைக் கொண்ட அவர், இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர்.

1924ம் ஆண்டு ஜுலை மாதம் சிங்கப்பூரில் செல்லப்பன் மற்றும் அபிராமி ஆகியோருக்குப் பிறந்தார்.

அவர் 1999ம் ஆண்டு வாக்கெடுப்பு இன்றி முதன்முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவர் 2005 மற்றும் 2009ம் ஆண்டுகளிலும் ஜனாதிபதியாகத் தெரிவாகி, 2011ம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றையதினம் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் இராணுவம் சிரியாவில் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள ஐ.எஸ். மற்றும் குர்திஸ் பேராளிகளின் இலக்குகள் மீது இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆயிரத்துக்கு 500 வரையிலான குர்திஸ் போராளிகள், துருக்கியின் காசியன்டெப் நகரில் தாக்குதல்களுக்கு தயாராகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் திருமண இல்லம் ஒன்றில் வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

இந்தத் தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகளே நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த குர்திஸ் படையினர் தயாராகி இருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் கடத்தப்பட்டுள்ள 39 இந்தியர்களை மீட்பதற்கு உதவுமாறு, ஈராக் அரசாங்கத்தை இந்தியா கோரியுள்ளது.

அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இந்திய ராஜாங்க வெளிவிவகார அமைச்சர், எம்.ஜே. அக்பர், ஈராக்கின் ஜனாதிபதி உள்ளிட்டவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் 2014ம் ஆண்டு குறித்த 39 பேரும் கடத்தப்பட்டனர்.

அவர்கள் குறித்த தகவல்கள் எவையும் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர்களை மீட்பதற்கு ஈராக் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

ஹில்ஸ்பரோஅனர்த்தம் குறித்த விசாரணைகளுக்காக 19 சாட்சியாளர்களிடம் காவற்துறையினர் உதவிக் கோரியுள்ளனர்.

அங்குள்ள காற்பந்து அரங்கில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தின் காரணமாக 96 பேர் உயிரிழந்தனர்.

1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இது குறித்து காவற்துறையினர் குற்றவியல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கிருந்து பெறப்பட்ட காணொளி ஆதாரங்களில் 19 சாட்சியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் முன்வந்து அங்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்த தகவலை வழங்க வேண்டும் என்று காவற்துறையினர் கோரியுள்ளனர்.

இங்கிலாந்தில் பணச்சலவைக் குற்றத்துக்கு உதவிய சிங்கள மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து கையாடப்பட்ட 2 லட்சம் பவுண்களுக்கும் அதிகமான தொகையை குறித்த இளைஞர், தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து சட்டரீதியான பணமாக மாற்ற உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவருக்கும் 22 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைக் குறித்த இளைஞர் தமது வீசா காலம் நிறைவடைந்த நிலையில் பிரித்தானியாவில் தங்கி இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அவரை தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர் நாடுகடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜெரமி கோபனை நீக்குமாறு, லண்டன் நகர முதல்வர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

ஜெரமி கோபன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறக் கூடாது என்ற பிரசாரத்தை மேற்கொள்வதில் தோல்வி அடைந்துள்ளார்.

அத்துடன் அவரால் வினைத்திறனான குழு ஒன்றை உருவாக்கவும் முடியாது என்பதையும் அவர் நிரூபித்துள்ளார்.

இந்த நிலையில் அவரால் வாக்காளர்களையும் ஒன்றிணைக்க முடியாது.

எனவே அவருக்குப் பதிலாக புதிய தலைவர் ஒருவரை நியமிக்குமாறு சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர் ஒருவர் டுபாயில் குற்றச்சாட்டுகள் இன்றி 3 வாரங்களாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதான அவர் பேஸ்புக்கில் தொண்டுப் பணிகள் சார்ந்த பதிவு ஒன்றை பகிர்ந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய குடியுரிமைகளைக் கொண்ட அவர்இ ஆப்கானிஸ்தானிய ஏதிலிகளுக்கு உதவும் நோக்கில் இந்த பேஸ்புக் பதிவை மேற்கொண்டுள்ளார்.

எனினும் அண்மையில் ஐக்கிய அரபு ராச்சியத்தில் அமுலாக்கப்பட்ட விதிகளின் படிஇ எந்த ஒரு பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனமும் அங்கு இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பிணை வழங்கவும்இ சட்ட உதவிகளை நாடவும் மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் உள்ள கறுப்பின மற்றும் இனரீதியான சிறுபான்மை மக்கள் இன்னும் இன சமநிலையற்றத் தன்மையை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் அவர்களுக்கு பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் வீடமைப்பு, தொழில்வாய்ப்புகள், கொடுப்பனவு மற்றும் குற்றவியல் வழக்குகளின் நீதிப் பெறுதல்கள் போன்றவற்றிலும் சிறுபான்மை மக்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

கறுப்பின பட்டதாரிகள், வெள்ளையின பட்டதாரிகளைக் காட்டிலும் சராசரியாக 23.1 சதவீதம் குறைந்த வருமானத்தையே பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

ரஷ்யாவின் விளையாட்டு வீரர்களிடம் அந்த நாட்டின் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு ரஷ்யாவே ஊக்கமருந்துகளை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்துக் கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பல வீரர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

அத்துடன் பரா-ஒலிம்பிக் எனப்படும் விசேட தேவை உடையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் ரஷ்யாவுக்குத் தடை ஏற்பட்டுள்ளது.

இதற்கு ரஷ்ய அரசாங்கத்தின் ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் ரஷ்ய விளையாட்டு வீரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பராஒலிம்பிக் குழுமம் தெரிவித்துள்ளது.

ஹில்ஸ்பரோஅனர்த்தம் குறித்த விசாரணைகளுக்காக 19 சாட்சியாளர்களிடம் காவற்துறையினர் உதவிக் கோரியுள்ளனர்.

அங்குள்ள காற்பந்து அரங்கில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தின் காரணமாக 96 பேர் உயிரிழந்தனர்.

1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இது குறித்து காவற்துறையினர் குற்றவியல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கிருந்து பெறப்பட்ட காணொளி ஆதாரங்களில் 19 சாட்சியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் முன்வந்து அங்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்த தகவலை வழங்க வேண்டும் என்று காவற்துறையினர் கோரியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான எதிர்வரும் கிரிக்கட் தொடரிலும், வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைத்துக் கொள்ளப்படமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்த வருட ஆரம்பத்தில் காயமடைந்த அவர், ஐ.பி.எல். போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த நிலையில் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் அடுத்த வருடம் வரையில் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே அவர் தென்னாப்பிரிக்காவுடனான கிரிக்கட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அவர் சிறிலங்கா கிரிக்கட்டுடன் முரண்பட்டதன் காரணமாகவே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக் தொடரின் காற்பந்தாட்ட போட்டிகளில் பிரேசில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.ஜேர்மனிக்கு எதிரான இந்தப் போட்டி இடம்பெற்றிருந்தது.

இதில் 1க்கு1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதனை அடுத்துத் தண்ட உதை அடிப்படையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது 5க்கு4 என்ற தண்ட உதை அடிப்படையில் ஜேர்மனியை பிரேசில் வெற்றிகொண்டது.

2017ம் ஆண்டு உலக கிண்ண அரையிறுதி போட்டியில் ஜேர்மனி பிரேசிலை 7க்கு1 என்ற கணக்கில் தோற்கடித்ததன் பின்னர், இந்த வெற்றி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக ஓட்ட வீரர் உசைன் போல்ட் தமது எட்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை இன்று பெற்றுக் கொண்டார்.

ஜமேக்காவைச் சேர்ந்த அவர், இன்று இடம்பெற்ற 200மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார்.

இது ஒலிம்பிக் போட்டிகளில் 3வது முறையாக அவர் பெறும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான தங்கப் பதக்கமாகும்.

குறித்த 200 மீற்றரை அவர் 19.78 செக்கண்ட்களில் ஓடி முடித்தார்.

இரண்டாம் இடத்தை கனடாவின் அன்றி டி க்ராஸும் மூன்றாம் இடத்தை ப்ரான்சின் க்றிஸ்தோப் லெமைட்ரேயும் வென்றனர்.

உசைன் போல்ட் ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார்.

அத்துடன் அவர் 100 மீற்றர் அஞ்சல் ஓட்ட இறுதி போட்டியில் நாளை பங்கேற்கிறார்.

ஏற்கனவே லண்டனிலும், பெய்ஜிங்கிலும் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில் நாளைய 100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் குறித்த எதிர்ப்பார்ப்பை அவர் அதிகரித்துள்ளார்.

இதேவேளை அவர் எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக செம்பியன்சிப் போட்டிகளுடன் ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BANNERCONTACT facebook apple android WEB1 SHOUTCAST SMARTPHONES SOUNDCAST SKYPE    
vi
widgetad1

முகநூல் பக்கத்தில்

vi
vi

இன்றைய செய்திகளை படிக்க

August 2016
M T W T F S S
« Jul    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031