வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த நினைவு தின நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
போர்க்குற்ற விசாரணை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு தடை
Written by Super Userபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில்,வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலை வர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டார்.
“வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.
நாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி, எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.
அவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால், நாட்டின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.
இலங்கையில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில், உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இர ண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
எனவே இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையை பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றது
இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் ,சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் ,இளையோர் அமைபுக்கள் இணை ந்து குறித்த போராட்டத்தினை நடாத்தியிருந்தனர்
மேலும் குறித்த போராட்டத்தினை அடுத்த 11 மணியளவில் கேப்பாபுலவு மக்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவினையும் தெரிவிக்க உள்ளனர்.
“புதிய அரசியலமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு நடைபெறாது” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோது, அதில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தே புதிய அரசாங்கம், ஆட்சிக்கு வந்தது. அதிகாரத்தை ஒழிப்பதாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்துப் பலமிக்க நாடாளுமன்ற ஆட்சியை உருவாக்குவோம் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி முறைமை இல்லாமற் செய்யப்பட்டே புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்படுகிறது. தாங்கள் ஜனாதிபதியானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கூறினார்.
ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகத் தெரிவித்து சந்திரிகா, 1994 இல் ஆட்சிக்கு வந்தார். 2000 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதனையே சொன்னார் ஆனால் செய்யவில்லை. 2005ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகத் தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதனையே கூறி வாக்குகளைப் பெற்று ஆட்சியை கைப்பற்றினார். ஆனால், முறைமையை ஒழிக்கவே இல்லை.
“2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?” என ஊடகவியலாளர்கள் கேட்டதுக்கு, “2020இல் தான் ஜனாதிபதி தேர்தலே நடைபெறாது. அப்போது அவர் எப்படி போட்டியிடுவார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் முடிவில் எவ்வித பயனும் இல்லை. எவ்வளவு தீர்மானங்களை அவர்கள் எடுத்துள்ளார்கள். சந்திரிகா காலத்தில் கூட்டாட்சி ( பெடரல்) என்றனர். மஹிந்த காலத்தில் ஒற்றையாட்சி என்றார்கள். எதுவுமே நடக்கவில்லை. என்றார் ராஜித.

ரஷ்ய விமானம் கருங்கடலில் வீழ்ந்து நொறுங்கியது 91 பேர் பலி
Written by Super Userரஷ்யாவின் ராணுவ விமானம் புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் ராடர் கருவியின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு மாயமானது. அந்த விமானம் விபத்திற்குள்ளாகி நொறுங்கி கருங்கடலில் விழுந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் பயணம் செய்த 91 பேர் மற்றும் குழுவினர் பலியாகியுள்ளதால் ரஷ்யாவில் பரபரப்பு நிலவி வருகிறது. ரஷ்யாவின் ராணுவ விமானம் டியு-154. இது சோச்சி என்ற விமான தளத்தில் இருந்து 91 பயணிகளுடன் புறப்பட்டது. சிரியாவில் உள்ள லடாகியா என்ற இடத்தை நோக்கி மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5. 20க்கு விமானம் மேலெழுந்து பறக்கத் தொடங்கியது.
பின்னர், சரியாக 20 நிமிடம் கழித்து விமானம் 5.40 மணிக்கு விமானத்தின் தொடர்பு ராடர் கருவியில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதனால் விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும், இதில் பயணம் செய்த 91 பேர் மற்றும் விமானக் குழுவினரின் கதி என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை. இந்நிலையில், இந்த விமானம் விபத்து ஏற்பட்டு நொறுங்கி கருங்கடலில் விழுந்துள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இதில் பயணம் செய்த 91 பேருடன் விமானக் குழுவினர் 8 பேரும் மடிந்துள்ளனர்.
தமிழகத்தை தொடர்ந்து தாக்கும் ஊழல் சூறாவழி, விழிக்குமா தமிழகம்?
Written by Super Userவரலாறு காணாத வகையில் தமிழகத்தைச் சுரண்டி நகைகளும், பணமுமாக குவித்த கும்பல் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டுள்ளது. அதிமுக வட்டாரத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும், தமிழக மக்களின் பணத்தையும், வளத்தையும் மிகப் பெரிய அளவில் சூறையாடியுள்ளனர் என்பதன் ஒரு அங்கம்தான் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், சேகர் ரெட்டி போன்றோர். வரைமுறையே இல்லாமல் பாரபட்சமே இல்லாமல், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து மட்ட அதிகாரிகள் மிகப் பெரிய சூறையாடலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதையே ராமமோகன் ராவ் வீடுகளில் சிக்கிய தங்கக் குவியலும் சேகர் ரெட்டியின் பணம் மற்றும் தங்கக் குவியலும் வெளிக்காட்டுகிறது.
இதற்கு முன்பு கரூரில் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது இருப்பிடங்களில் நடந்த ரெய்டுகளும் இதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மத்திய அரசு சசிகலா குரூப்புக்கு கடும் நெருக்கடி தரும் வகையில்தான் இதை அரங்கேற்றி வருகிறது என்றாலும் கூட மிகப் பெரிய சூறையாடலில் அதிமுக அரசும், அதிகாரிகளும் ஈடுபட்டனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
வளைத்து வளைத்து சுருட்டல் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே அமைச்சர்களும், அதிகாரிகளும் வளைத்து வளைத்து சொத்துக் குவிப்பிலும், லஞ்சம் வாங்கிக் குவிப்பதிலும் படு தீவிரமாக இருந்தனர். இதுகுறித்து எத்தனையோ செய்திகள் வெளியாகின. எத்தனையோ புகார்களும் வந்தன. ஆனால் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே மாறிப் போனது.
நத்தம் விஸ்வநாதன் ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் சசிகலா உத்தரவின் பேரில் பல அமைச்சர்களின் வீடுகளில் போலீஸாரை விட்டு ரெய்டு நடத்தி பெருமளவில் பணத்தைக் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவையெல்லாம் இருட்டில் வரையப்பட்ட சித்திரமாகவே இருந்தது. எவ்வளவு எடுக்கப்பட்டது என்பது இதுவரை கணக்கில்லை.
ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகள் என்று மட்டும் செய்திகள் உலா வந்தன. அவர்களில் முக்கியமானவர் நத்தம். பெருமளவில் முறைகேடு நத்தம் விஸ்வநாதன் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது மிகப் பெரிய அளவில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பல கோடி அளவுக்கு இந்த முறைகேடுகள் இருந்ததாகவும் பரபரப்பு எழுந்தது. வெளிநாடுகளிலும் அவர் சொத்து வாங்கிக் குவித்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
அதிரடி ரெய்டுகள் நத்தம் விஸ்வநாதன் விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர். ஆனால் நத்தம் இப்போது சசிகலா பக்கம் போய் விட்டார். இதேபோல காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த சில அமைச்சர்களிடமிருந்தும் கூட பெருமளவில் பணம் சிக்கியதாகவும் அப்போது பேசப்பட்டது. கரூர் அன்புநாதன் அதேபோல கரூர் அன்புநாதன் இருப்பிடத்தில் நடந்த அதிரடி சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது.
அன்புநாதன், ஓ.பன்னீர் செல்வம், சென்னை மேயர் சைதை துரைசாமி, செந்தில் பாலாஜி போன்றோருக்கு நெருக்கமானவர். நத்தம் விஸ்வநாதனுடனும் தொடர்புடையவர். அதுவும் பெரும் சர்ச்சையானது.
ஞானதேசிகன் அதேபோல மாஜி தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வீடுகளிலும் சோதனை நடந்தது. நத்தம் விஸ்வநாதனுடன் சேர்ந்து இவரும் மின்துறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இப்போது இவர்தான் ராமமோகன் ராவை மாட்டி விட்டுள்ளதாகவும் ஒரு புதிய தகவல் பரவி வருகிறது.
பெரிய முதலை சேகர் ரெட்டி ஆனால் இவர்களை விட பெரிய முதலையாக மாட்டியவர்தான் சேகர் ரெட்டி. மலை முழுங்கி மகாதேவன் கதையாக இருக்கிறது ரெட்டி சுட்ட பணம் மற்றும் தங்கத்தின் கதை. புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களை கோடிக்கணக்கில் குவித்து வைத்தும், தங்கக் கட்டிகளைப் பதுக்க வைத்தும் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெட்டி. ஓ.பி.எஸ் ..
. ஓ.பி.எஸ் இவருக்கும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. போயஸ் கார்டனுக்கும் நெருக்கமானவர். அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பருடனும் இணைந்து பெருமளவில் மோசடி செய்தவர்.
இவரை ஆதரித்து அரவணைத்து அள்ளி எடுக்க வழி வகுத்துக் கொடுத்தவர்தான் ராமமோகன் ராவ். எங்கெங்கோ போய் குவியும் தமிழகத்தின் வளம் தமிழகத்திலிருந்து சுரண்டிய பணத்தையும், வளத்தையும், பொருளையும் ஆந்திராவிலும், கர்நாடகத்திலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்து விட்டு அதிகார மமதையோடு வலம் வந்த இந்த கும்பலைப் பார்த்து தமிழக மக்கள் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.
எல்லாப் பக்கமும் ஊழல் இப்படி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, இப்போதைய ஆட்சியிலும் சரி அரசியல்வாதிகள், அவர்களின் கூட்டாளிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், பினாமிகள், காண்டிராக்டர்கள் என அனைவரும் கூட்டு சேர்ந்து தமிழகத்தை சூறையாடியது இதுவரை கண்டிராத மிகப் பெரிய கொடுமை. தமிழகத்திற்கு மிகப் பெரிய அவமானத்தையும், தலைக்குனிவையும் இவர்கள் தேடிக் கொடுத்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.